/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி:@subtitle@ தியாகராஜ சுவாமி கோவில் குளக்கரை குப்பையால் நாசம்

ADDED : செப் 24, 2024 12:28 AM
தியாகராஜ சுவாமி கோவில் குளக்கரை குப்பையால் நாசம்
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் வெளியே, ஆதிசேஷ தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் கிழக்கு குளக்கரை பக்கம், துாய்மை பணி மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம் குப்பைத் தொட்டியை வைத்துள்ளது.
சுற்றுவட்டார மக்கள் குப்பையை கொட்டுகின்றனர். சில நேரங்களில் நிரம்பி வழியும் குப்பை தொட்டியால், குளக்கரை நாசமாகிறது.
இதனால், குளத்தை பார்த்து ரசிக்க அவ்வழியே செல்ல முடியவில்லை. கிழக்கு குளக்கரை பக்கம் தான், காரிய மேடையும் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த துாய்மை பணி நிறுவனம், குப்பையை சரியாக கையாள வேண்டும். மீறி குப்பையை குளக்கரையில் வீசி செல்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.நவீன் ராஜ், திருவொற்றியூர்.