/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மயான பூமிகள் துாய்மையில் அக்கறை 1.59 லட்சம் கிலோ குப்பை அகற்றம்
/
மயான பூமிகள் துாய்மையில் அக்கறை 1.59 லட்சம் கிலோ குப்பை அகற்றம்
மயான பூமிகள் துாய்மையில் அக்கறை 1.59 லட்சம் கிலோ குப்பை அகற்றம்
மயான பூமிகள் துாய்மையில் அக்கறை 1.59 லட்சம் கிலோ குப்பை அகற்றம்
ADDED : ஜன 04, 2025 12:35 AM

சென்னை, மயான பூமிகள் குப்பைக் காடாக மாறுவதை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று தீவிர கவனம் செலுத்தினர். மயான பூமியில் மேற்கொள்ளப்பட்ட தீவிர துாய்மை பணியில், 1.59 லட்சம் கிலோ குப்பை அகற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பை, கட்டட கழிவு, சாலையோரங்கள் மற்றும் மைய தடுப்புகளில் குவிந்துள்ள மண் உள்ளிட்ட திடக்கழிவு அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி, டிச., 30ல் பேருந்து நிறுத்தங்களில், தீவிர துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, 203 மயான பூமியில், நேற்று காலை, 6:00 முதல் 8:00 மணி வரை தீவிர துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த துாய்மை பணியின்போது, அனைத்து சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் உள்ள குப்பை, கட்டட கழிவு அகற்றப்பட்டது.
சுவரொட்டிகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள், பலகைகள், மண்டிக்கிடக்கும் புல்செடிகள், புதர் செடிகள், இதர தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டன.
அதன்படி, 93,380 கிலோ குப்பை, 65,780 கிலோ கட்டட கழிவு என, ஒரு லட்சத்து, 59,160 கிலோ திடக்கழிவு அகற்றப்பட்டது. அதேபோல், 666 சுவரொட்டிகள், பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன.