/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ள பாதிப்பால் சேதமடைவதை தடுக்க மணலியில் ரூ.1.80 கோடியில் கான்கிரீட் சாலை
/
வெள்ள பாதிப்பால் சேதமடைவதை தடுக்க மணலியில் ரூ.1.80 கோடியில் கான்கிரீட் சாலை
வெள்ள பாதிப்பால் சேதமடைவதை தடுக்க மணலியில் ரூ.1.80 கோடியில் கான்கிரீட் சாலை
வெள்ள பாதிப்பால் சேதமடைவதை தடுக்க மணலியில் ரூ.1.80 கோடியில் கான்கிரீட் சாலை
ADDED : டிச 30, 2024 01:20 AM

மணலி: சென்னை, மணலி மண்டலம் எட்டு வார்டுகளை கொண்டது. இதில், 18, 20, 21, 22 ஆகிய நான்கு வார்டுகளை உள்ளடக்கிய மணலியின் மைய பகுதியில் இருந்து வெளியேற, நான்கு வழிகள் உள்ளன.
அவை, காமராஜர் சாலை - மாத்துார் சந்திப்பு; காமராஜர் சாலை - சி.பி.சி.எல்., சந்திப்பு; மணலி - கொடுங்கையூர் இணைப்பு சாலை; நெடுஞ்செழியன் தெரு - மாதவரம் விரைவு சாலை சாலைகளாகும்.
இதில், நெடுஞ்செழியன் தெரு - மாதவரம்விரைவு சாலையை இணைக்கும் தார்ச்சாலை பிரதானமாகும். காரணம், மணலிபுதுநகர், மாதவரம், சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்லும் பை - பாஸ் சாலைகளுக்கு செல்ல, இவ்வழியாகவே சென்றாக வேண்டும்.
இந்நிலையில், மாதவரம்விரைவு சாலையை காட்டிலும், நெடுஞ்செழியன் தெரு இணைப்பு சாலை, மூன்றடிக்கும் தாழ்வாக இருந்தது.
இதன் காரணமாக, மழை காலங்களில் கால் மூட்டு அளவிற்கு மழைநீர் தேங்கி, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி போய் விடுகிறது.
மேலும், சமீபத்தில் அமைக்கப்பட்ட ராட்சத மழைநீர் வடிகாலால், இன்னும் சாலை தாழ்வாகி போனது. இதன் காரணமாக, மழை காலத்தில் இவ்வழியே போக்குவரத்து முற்றிலுமாக முடங்கும், அபாயம் நிலவி வந்தது.
இதற்கு தீர்வாக, 1.80 கோடி ரூபாய் செலவில், மழைநீரால் சேதமாகாதபடி, சாய்தள வடிவமைப்பிலான கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இச்சாலை பணிகள்முழுதும் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மழைநீரால் மணலி துண்டிக்கப்படும் பிரச்னை இருக்காது என, அதிகாரிகள் கூறினர்.