/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் நீதிபதி மகனை தாக்கிய தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமின்
/
பெண் நீதிபதி மகனை தாக்கிய தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமின்
பெண் நீதிபதி மகனை தாக்கிய தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமின்
பெண் நீதிபதி மகனை தாக்கிய தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : ஏப் 10, 2025 12:21 AM
முகப்பேர், முகப்பேர் கிழக்கு, பாரி சாலையில், கார் பார்க்கிங் விவகாரத்தில், பெண் நீதிபதி ஒருவரின் மகன் ஆதிசூடி, 35, தரப்புக்கும், பிக்பாஸ் புகழ், நடிகர் தர்ஷன், 31, தரப்புக்கும், கடந்த 3ம் தேதி மாலை, பிரச்னை ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதில், ஆதிசூடியின் கர்ப்பிணி மனைவி, மாமியாரை தாக்கியதாக, தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ், 31, ஆகியோர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.
ஆதிசூடி, அவரது மனைவி, மாமியார் என மூவர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய பட்டது. கடந்த 4ம் தேதி இரவு, தர்ஷன், லோகேஷ் இருவரும், அம்பத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி, அம்பத்துார் நீதிமன்றத்தில் இருவருக்கும் ஜாமின் கோரி, தர்ஷன் தரப்பு வழக்கறிஞர் குழு மனு தாக்கல் செய்தது. நேற்று தர்ஷன், லோகேஷ் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி அம்பதுார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
****

