/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுசேரி 'டேட்டா சென்டர்' கட்டுமானத்துக்கு நிபந்தனை
/
சிறுசேரி 'டேட்டா சென்டர்' கட்டுமானத்துக்கு நிபந்தனை
சிறுசேரி 'டேட்டா சென்டர்' கட்டுமானத்துக்கு நிபந்தனை
சிறுசேரி 'டேட்டா சென்டர்' கட்டுமானத்துக்கு நிபந்தனை
ADDED : ஜன 18, 2024 12:21 AM
சென்னை,சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் சிறுசேரியில் சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், 5.99 ஏக்கர் நிலத்தை, எஸ்.டி.டி. குளோபல் டேட்டா சென்டர் என்ற நிறுவனம், குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளது. இங்கு, 2.01 லட்சம் சதுர அடி பரப்பளவில் டேட்டா சென்டர் அமைகிறது.
சிப்காட் லே அவுட்டில், 98 அடி சாலையை ஒட்டி இதற்கான மனை அமைந்துள்ளது. இதற்கான கட்டுமான திட்ட அனுமதி கோரி நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யில் விண்ணப்பித்துள்ளது.
இது தொடர்பாக டி.டி.சி.பி.,யின் அடுக்குமாடி கட்டடங்கள் குழு கூட்டத்தில் சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
டேட்டா சென்டர் கட்டுமானத்துக்கான வரைபடத்தில், குறிப்பிட்ட சில குறைபாடுகள் தெரியவந்துள்ளன. வாகன நிறுத்துமிட வசதி, அடித்தள கட்டுமான பரப்பளவு மற்றும் உயரம் தொடர்பான விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இத்துடன், டி.டி.சி.பி., இயக்குனர் பரிந்துரைக்கும் உறைவிட கட்டணம் செலுத்த வேண்டும், பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, விமான போக்குவரத்து துறை ஆகியவற்றின் தடையின்மை சான்று பெற வேண்டும். தனித்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட ஏழு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில், ஒப்புதல் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.