/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடத்துனர், எஸ்.ஐ., குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
/
நடத்துனர், எஸ்.ஐ., குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
நடத்துனர், எஸ்.ஐ., குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
நடத்துனர், எஸ்.ஐ., குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
ADDED : அக் 26, 2024 03:31 AM
சென்னை:பயணியால் கொலை செய்யப்பட்ட, மாநகர பஸ் கண்டக்டர், விபத்தில் பலியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பங்களுக்கு, நிதியுதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, மகாகவி பாரதியார் நகரில் இருந்து, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் மாநகர பஸ் சென்றது. அந்த பஸ் கண்டக்டர் ஜெகன்குமாருக்கும், பயணி ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பயணி தாக்கியதில் காயமடைந்த ஜெகன்குமார், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில், சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சுப்பையா, 57. கடந்த 21ம் தேதி பணி முடிந்து, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, சாலையில் தவறி விழுந்து காயம் அடைந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், இருவர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜெகன்குமார் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய்; சுப்பையா குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, வழங்க உத்தரவிட்டுள்ளார்.