/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் தகராறு மனைவியை கொன்றவர் வாக்குமூலம்

ADDED : ஜன 31, 2025 12:23 AM

மணலி,
'மகளுக்கு யார் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்ப்பது என்ற சண்டையில், மனைவியை வெட்டிக் கொலை செய்தேன்' என, கைதான கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மணலி, சின்னசேக்காடு - பல்ஜிபாளையம், 4வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த மகாராஜா, 60, கருவாடு வியாபாரி. இவரது மனைவி சவுந்தரவல்லி, 53.
இவர்களுக்கு, மூன்று மகள் மற்றும் மகன் உள்ளனர். இதில், இரு மகள்களுக்கு திருமணமாகி, தனியே வசிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட தகராறில், மகாராஜா கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், சவுந்தரவல்லி சம்பவ இடத்திலேயே பலியானார். மகாராஜா, மணலி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில், 'மூன்றாவது மகளுக்கு, யார் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்ப்பது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது வீட்டில் இருந்த நுங்கு வெட்டும் கத்தியை எடுத்து, மனைவியின் தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்தேன்' என, மகாராஜா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.