/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரும்புலியூரில் சாலை விரிவாக்க பணி வண்டலுார் - தாம்பரத்தில் நெரிசல்
/
இரும்புலியூரில் சாலை விரிவாக்க பணி வண்டலுார் - தாம்பரத்தில் நெரிசல்
இரும்புலியூரில் சாலை விரிவாக்க பணி வண்டலுார் - தாம்பரத்தில் நெரிசல்
இரும்புலியூரில் சாலை விரிவாக்க பணி வண்டலுார் - தாம்பரத்தில் நெரிசல்
ADDED : அக் 29, 2024 12:07 AM

பெருங்களத்துார், தாம்பரம் அடுத்த இரும்புலியூரில், ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்க பணி காரணமாக, வண்டலுார் - தாம்பரம் மார்க்கமாக நேற்று, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம் அடுத்த இரும்புலியூரில், அதிகரித்து வரும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி., சாலையை விரிவாக்கம் செய்து, வாகனங்கள் 'யு டர்ன்' எடுக்க 'அன்டர்பாஸ்' எனும் கீழ்வழி பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், தாம்பரம் - பெருங்களத்துார் மார்க்கமான பாதையில், பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன.
அடுத்ததாக, பெருங்களத்துார் - தாம்பரம் மார்க்கமான பாதையில், சில வாரங்களாக இப்பணிகள் நடந்து வருகின்றன.
இதன் காரணமாக, அங்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை, வண்டலுார் முதல் இரும்புலியூர் வரை கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தினமும் இப்பிரச்னை உள்ளது.
தீபாவளி நேரத்தில், வெளியூர்களுக்கு செல்லும் நபர்களால் தான், தாம்பரம், பெருங்களத்துாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
ஆனால், சாலை விரிவாக்கப் பணி காரணமாக, வண்டலுார் - தாம்பரம் மார்க்கமான பாதையில் நெரிசல் ஏற்பட்டு வருவது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.