/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரண்டடுக்கு மேம்பால பணியால் ஆற்காடு சாலையில் நெரிசல்
/
இரண்டடுக்கு மேம்பால பணியால் ஆற்காடு சாலையில் நெரிசல்
இரண்டடுக்கு மேம்பால பணியால் ஆற்காடு சாலையில் நெரிசல்
இரண்டடுக்கு மேம்பால பணியால் ஆற்காடு சாலையில் நெரிசல்
ADDED : செப் 08, 2025 06:25 AM

வளசரவாக்கம்: வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணியால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சென்னையில் இரண்டாம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி தடமும், மாதவரம் - சோழிங்கநல்லுார் வழித்தடமும், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், மேம்பால பாதையில் அமைகின்றன.
இதற்காக, அப்பகுதியில் 'டபுள் டெக்கர் லைன்' எனும் இரண்டடுக்கு மேம்பால பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மாதவரத்தில் இருந்து கீழ் தடத்தில் வரும் மெட்ரோ ரயில், கிண்டி செல்ல மேல் தடத்திற்கும்; பூந்தமல்லியில் இருந்து மேல் தடத்தில் வரும் மெட்ரோ ரயில், மாதவரம் செல்ல கீழ் தடத்திற்கும் தன்னிச்சையாக தடம் மாற்றுவதற்கான கட்டுமான பணிகள் நடக்கின்றன.
இதற்காக, கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டு பணிகள் நடந்து வருவதால், வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் முதல் ஸ்ரீதேவிகுப்பம் சாலை வரை 500 மீட்டர் துாரத்திற்கு சாலை குறுகலாகி, நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.