/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெப்ஸ் சிக்னலில் நெரிசல் போக்குவரத்து மாற்றம்
/
மெப்ஸ் சிக்னலில் நெரிசல் போக்குவரத்து மாற்றம்
ADDED : அக் 20, 2024 12:39 AM

தாம்பரம்தாம்பரம் சானடோரியம்மெப்ஸ் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் பணி செய்வோரில் பெரும்பாலானோர், வேன், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
மெப்ஸ் வளாகம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில், 'யு டர்ன்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மற்ற வாகனங்களுடன், மெப்ஸ் வளாகத்திற்குள் செல்லும், வரும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த நெரிசலை தவிர்க்க, மெப்ஸ் வளாகத்திற்குள் இருந்து வரும் வாகனங்கள், யு டர்ன் எடுப்பதை தவிர்த்து, இடது புறம் திரும்பி ஜி.எஸ்.டி., சாலை வழியாக காசநோய் சிக்னல் வரை சென்று, யு டர்ன் எடுத்து, தாம்பரம் நோக்கி செல்லும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெரிய வாகனங்கள், எம்.ஐ.டி., மேம்பாலத்தில் ஏறி, யு டர்ன் எடுத்து, தாம்பரம் நோக்கி செல்ல வேண்டும்.
அதேநேரத்தில், மெப்ஸ் சிக்னலில் உள்ளே செல்லக்கூடிய வாகனங்கள், வழக்கம் போல் யு டர்ன் எடுத்துச் செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்தால், தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் சிக்னலில் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.