sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நாய் தொல்லை தாங்க முடியலை மண்டல குழுவில் காங்., புகார்

/

நாய் தொல்லை தாங்க முடியலை மண்டல குழுவில் காங்., புகார்

நாய் தொல்லை தாங்க முடியலை மண்டல குழுவில் காங்., புகார்

நாய் தொல்லை தாங்க முடியலை மண்டல குழுவில் காங்., புகார்


ADDED : நவ 18, 2024 04:10 AM

Google News

ADDED : நவ 18, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்:அம்பத்துார் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி தலைமையில் நடந்தது. மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன் உட்பட குடிநீர் வாரியம், மின்சாரம் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

பானுபிரியா, காங்., கவுன்சிலர்:

வார்டில் பல மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால், 15 கம்பங்களை மட்டும் புதுபிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டில் சேதமடைந்த மொத்த மின் கம்பங்களையும் சரி செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.

திலகர், காங்., கவுன்சிலர்:

அங்கன்வாடி கட்டடம் முழுதும் கரையான் அரித்துள்ளது. பலமுறை கோரிக்கை வைத்தும், சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து பூங்காக்கள், தெருக்களிலும் நாய் தொல்லை அதிகரித்துள்ளது. முதியோர், கர்ப்பிணியர், குழந்தைகள் நடை பயிற்சிக்கு செல்ல முடிவதில்லை.

ஜான், அ.தி.மு.க., கவுன்சிலர்:

ஆரம்ப சுகார நிலைய பணிகள் முடிந்து, ஆறு மாதங்களாகியும் இன்னும் திறக்கவில்லை.

'இதற்கெல்லாம் தீர்வு காணப்படும்' என, மண்டல குழு தலைவரும், அதிகாரிகளும் உறுதி அளித்தனர்.






      Dinamalar
      Follow us