/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு ஒப்படைக்க தாமதித்த கட்டுமான நிறுவனம் ரூ.14.80 லட்சத்தை வட்டியுடன் வழங்க உத்தரவு

ADDED : ஏப் 24, 2025 11:50 PM
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த போந்துார் கிராமத்தில், மார்க் புராப்பர்ட்டீஸ் நிறுவனம் சார்பில், குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் வீடு வாங்க, போனி பிரான்சிஸ் என்பவர், 14.80 லட்ச ரூபாய், பிரவீன் நாயர் என்பவர், 6.22 லட்ச ரூபாயை செலுத்தினர்.
இவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட காலத்திற்குள், வீட்டை கட்டுமான நிறுவனம் ஒப்படைக்கவில்லை.
இது தொடர்பாக, போனி பிரான்சிஸ், பிரவீன் நாயர் ஆகியோர், தனித்தனியாக ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில், கட்டுமான நிறுவனம் வீடு கட்டும் பணிகளை முடிக்கவில்லை. இதனால், பணம் செலுத்தியவர்களுக்கு, குறித்த காலத்தில் வீடு கிடைக்கவில்லை.
எனவே, போனி பிரான்சிஸ் செலுத்திய, 14.80 லட்ச ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். அதே போல், பிரவீன் நாயர் செலுத்திய, 6.22 லட்ச ரூபாயையும் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும்.
அத்துடன், வழக்கு செலவாக, தலா 25,000 ரூபாயை, இரண்டு மனுதாரர்களுக்கும் கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.