/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமற்ற பொருட்கள் கட்டுமானம் பயணியர் நிழற்குடைகள் சேதம்
/
தரமற்ற பொருட்கள் கட்டுமானம் பயணியர் நிழற்குடைகள் சேதம்
தரமற்ற பொருட்கள் கட்டுமானம் பயணியர் நிழற்குடைகள் சேதம்
தரமற்ற பொருட்கள் கட்டுமானம் பயணியர் நிழற்குடைகள் சேதம்
ADDED : நவ 17, 2025 03:23 AM

சென்னை: தரமற்ற கட்டுமான பணியால், சில மாதங்களிலேயே பயணியர் நிழற்குடை சேதமடைந்து உள்ளது.
மணலி விரைவு சாலையில், சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே, பர்மா நகர் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இங்கு, சென்னை மாநகராட்சி மேயர் மேம்பாட்டு நிதியின் கீழ், பயணியர் நிழற்குடை சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.
தரமற்ற கட்டுமானத்தால், மாற்றுத்திறனாளிகள் நிழற்குடைக்குள் ஏறுவதற்கு வைக்கப்பட்ட கம்பிகள் பெயர்ந்து விழுந்துள்ளன. மேலும், தரை பகுதியில் பதிக்கப்பட்ட கற்களும் பெயர்ந்துள்ளன.
அதேபோல, சத்தியமூர்த்தி நகர் பேருந்து நிழற்குடையும், தரமற்ற கட்டுமானத்தால் தரை பகுதி முழுதும் சேதமாகிஉள்ளது. எண்ணுார் - பாரதியார் நகர் பயணியர் நிழற்குடையும், கூரையின்றி பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலை உள்ளது.
அதுமட்டுமல்லாமல், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்த நிழற்குடையில், மாற்றுத்திறனாளிகள் ஏற உதவியாக இருக்கும், கைப்பிடி கம்பிகள் உடைந்து, காயம் ஏற்படுத்தும் வகையில் கூர்மையாக உள்ளது.
சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கவனித்து, சேதமான நிழற்குடைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

