/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டட தொழிலாளர்களின் போன், ரூ.25,000 திருட்டு
/
கட்டட தொழிலாளர்களின் போன், ரூ.25,000 திருட்டு
ADDED : ஆக 27, 2025 12:16 AM
பெரும்பாக்கம், கட்டுமான பணியிடத்தில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்களின் எட்டு மொபைல் போன்கள் மற்றும் 25,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஒட்டியம்பாக்கம் அடுத்த அரசன்கழனி பகுதியில், 'புட் கோர்ட்' கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு, கடந்த மூன்று மாதங்களாக, வட மாநில தொழிலாளர்கள் 10 பேர், தற்காலிக குடியிருப்பில் தங்கி, கட்டுமான வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்றிரவு துாங்கி எழுந்த போது, அவர்களின் எட்டு மொபைல் போன்கள் மற்றும் 25,000 ரூபாய் ஆகியவை திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த நிறுவன மேற்பார்வையாளர் ராஜேஷ், பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, அப்ப்குதியில் இருந்த 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

