/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறப்பு தலைமை செயலர், தேனி கலெக்டரை கைது செய்ய நுகர்வோர் கோர்ட் உத்தரவு
/
சிறப்பு தலைமை செயலர், தேனி கலெக்டரை கைது செய்ய நுகர்வோர் கோர்ட் உத்தரவு
சிறப்பு தலைமை செயலர், தேனி கலெக்டரை கைது செய்ய நுகர்வோர் கோர்ட் உத்தரவு
சிறப்பு தலைமை செயலர், தேனி கலெக்டரை கைது செய்ய நுகர்வோர் கோர்ட் உத்தரவு
ADDED : நவ 23, 2025 06:49 AM

தேனி : குடிநீர் இணைப்பு துண்டித்த விவகாரத்தில், நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பு செய்ததற்காக, தேனி கலெக்டர், முதல்வர் சிறப்பு பிரிவு தலைமை செயலர், ஊராட்சிகள் நிர்வாக முதன்மை செயலர் உட்பட ஆறு பேரை கைது செய்ய தேனி நுகர்வோர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் பவுசியா பானு. இவரது வீட்டிற்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பை துண்டித்தது தொடர்பாக, தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், 2024ல் வழக்கு தொடர்ந்திருந்தார். 2025 ஜூன் 10ல் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில், பவுசியா பானுவிற்கு மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கவும், இழப்பீட்டு தொகை, வழக்கு செலவு உட்பட, 1.10 லட்சம் ரூபாயை அரசு வழங்கவும் உத்தரவிட்டது.
நான்கு மாதங்களாக நீதிமன்ற உத்தரவு மீது நடவடிக்கை எடுக்காததால், உத்தரவை நிறைவேற்ற கோரி, தேனி நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் மீண்டும் மனு செய்தார்.மனுவை, 2025 நவ., 7ல் விசாரித்த நீதிபதி சுந்தர், நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், தேனி கலெக்டர், பெரியகுளம் பி.டி.ஓ., ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலர், முதல்வரின் தனிப்பிரிவு தலைமை செயலர் ஆகியோரை கைது செய்ய, பிணையில்லா வாரன்ட் பிறப்பித்தார்.
இதில் குறிப்பிட்டுள்ள ஆறு பேரையும், 2025 டிச., 12க்குள் கைது செய்து ஆஜர்படுத்த, பெரியகுளம் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.பவுசியா பானு வழக்கறிஞர் பாண்டியன் கூறுகையில், ''நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் மதிக்கவில்லை. அதனால் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தோம். நீதிபதி
உத்தரவிட்ட பின் பெரியகுளம் ஒன்றிய அலுவலர்கள் சிலர் நேரில் வந்தனர்.''அவர்கள், அரசு சார்பில் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் ஆணைய டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால், மேல் முறையீடு செய்ததற்கான எந்த தகவலும் நீதிமன்றம் மூலம் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகள் கைது செய்யப்படவும் இல்லை,'' என்றார்.வழக்கின் தீர்ப்பு
பற்றி கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் கேட்ட போது, ''நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை ஆணை வாங்கி உள்ளோம். மற்றொருவரின் பட்டா நிலம் வழியாக குழாய் அமைத்துள்ளனர்,'' என்றார்.

