/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெரு நாயை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
/
தெரு நாயை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
ADDED : நவ 23, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி: வீட்டிலிருந்து வெளியேறிய வளர்ப்பு நாய், விரட்டி விரட்டி கடித்ததில், தெரு நாய் படுகாயமடைந்தது குறித்து, கால்நடை துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. வீட்டில் மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், 'பிட்புல்' வகை நாய், திறந்திருந்த கேட் வழியாக வெளியே வந்தது.
தெருவில் நின்ற நாயை விரட்டி விரட்டி கடித்தது. தெரு மக்கள் துரத்தினாலும், தெருநாயை கடிப்பதை அந்த வளர்ப்பு நாய் விடவில்லை. ஒரு கட்டத்தில் பலத்த காயத்துடன் தெரு நாய் ஓடியது.
இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, மாநகராட்சியின் கால்நடை துறை அதிகாரிகள், கடித்து குதறிய வளர்ப்பு நாய் யாருடையது; முறையான உரிமம் பெறப்பட்டு உள்ளதா என, விசாரித்து வருகின்றனர்.

