/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளிவட்ட சாலையில் கன்டெய்னர் லாரி தீக்கிரை
/
வெளிவட்ட சாலையில் கன்டெய்னர் லாரி தீக்கிரை
ADDED : மார் 16, 2025 12:25 AM

ஆவடி,
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 56; லாரி ஓட்டுனர். இவர், நேற்று நள்ளிரவு, சென்னை மணலியில் இருந்து குன்றத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு, கன்டெய்னர் லாரியில் 'பிளாஸ்டிக்' மூலப்பொருட்கள் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
மீஞ்சூர் வெளிவட்ட சாலை, காட்டூர் சிப்காட் அருகே சென்றபோது, மின் கசிவால் பேட்டரியில் இருந்து புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த கருப்பசாமி, லாரியை சாலையோரம் நிறுத்தி, கீழே இறங்கி ஓடினார். அதற்குள் தீ கொழுந்துவிட்டெரிய துவங்கியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு துறையினர், 10 நிமிடத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். ஆனால், அதற்குள் லாரியின் முன்பக்க 'கேபின்' முழுதும் தீக்கிரையானது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.