/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 01, 2025 11:47 PM

எண்ணுார், கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், எண்ணுார் விரைவு சாலையில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இருந்து, மணலி புதுநகர் சரக்கு பெட்டக முனையம் நோக்கி, நேற்று காலை, கன்டெய்னர் லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
மதுரையைச் சேர்ந்த இளஞ்செழியன், 39, என்பவர், லாரியை ஓட்டினார்.
எண்ணுார் விரைவு சாலை, எர்ணாவூர் - ராமகிருஷ்ணா நகர் சந்திப்பு அருகே, கன்டெய்னர் லாரி திரும்பும்போது, திடீரென பக்கவாட்டில் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுனர், லாரிக்குள் சிக்கிக் கொண்டார்.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த, எண்ணுார் போக்குவரத்து போலீசார், லாரி ஓட்டுனரை பத்திரமாக மீட்டனர்.
அவருக்கு, முதுகு மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. அவர், சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து, ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, கன்டெய்னர் லாரி அப்ப்புறப்படுத்தப்பட்டது.
லாரி சாலையில் கவிழ்ந்ததால், அவ்வழியே மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
***-