/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் ஆளுங்கட்சி தொழிற்சங்கம் போர்க்கொடி
/
ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் ஆளுங்கட்சி தொழிற்சங்கம் போர்க்கொடி
ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் ஆளுங்கட்சி தொழிற்சங்கம் போர்க்கொடி
ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் ஆளுங்கட்சி தொழிற்சங்கம் போர்க்கொடி
ADDED : நவ 09, 2024 12:44 AM
சென்னை, ஆரம்ப சுகாதார நிலைய ஒப்பந்த பணியாளர்களின் பணி நிரந்தர கோரிக்கை தொடர்பாக, மாநகராட்சி கமிஷனருடன், தொ.மு.ச., பொதுச் செயலர் சண்முகம் பேச்சு நடத்தினார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள, 175 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,500 பேர் ஒப்பந்தப் பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில், நர்ஸ்களுக்கு 18,000 ரூபாய்; மருந்தாளுனர்களுக்கு 15,000 ரூபாய்; லேப் டெக்னிஷியன்களுக்கு 13,000 ரூபாய், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு, 12,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த பணியாளர்கள், தங்களை பணிநிரந்தரம் செய்ய கோரி வருகின்றனர்.
இந்நிலையில், பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு தொடர்பாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று, கமிஷனர் குமரகுருபரனை, தொ.மு.ச., பொதுச்செயலரும், எம்.பி.,யுமான சண்முகம் சந்தித்து பேசினார்.
பின், எம்.பி., சண்முகம் கூறுகையில், ''குறைந்தபட்சமாக ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டு நாட்களில், நல்ல முடிவை சொல்வதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு சொல்லவில்லை என்றால், முதல்வரை சந்திப்போம்,'' என்றார்.
செவிலியர் ஜெயபிரியா கூறுகையில், ''ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். எனக்கு இதுவரை, 500 ரூபாய் தான் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நிரந்தர பணியாளர்களுக்கு நிகராக பணியாற்றி வரும் எங்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,'' என்றார்.