/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செக் மோசடி வழக்கு ஒப்பந்ததாரர் கைது
/
செக் மோசடி வழக்கு ஒப்பந்ததாரர் கைது
ADDED : ஏப் 08, 2025 02:17 AM
தாம்பரம், மணலி, சின்னசேக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், 45. கட்டட
ஒப்பந்ததாரர். தாம்பரம் சானடோரியத்தை சேர்ந்தவர் விமல், 45. ஜல்லி,
கருங்கல் ஜல்லி சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
தனது
வேலைக்கு ஜல்லி, கருங்கல் ஜல்லி சப்ளை செய்யுமாறும், பின்னர் பணம்
கொடுப்பதாகவும் பிரபாகரன் கேட்டுக்கொண்டதன்பேரில், விமல் பொருட்களை சப்ளை
செய்தார்.
அதற்கு, 8 லட்சம் ரூபாய்க்கு எச்.டி.எப்.சி., வங்கி
காசோலையை பிரபாகரன் கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில்
செலுத்தியபோது, பணம் இல்லை என்று வந்தது.
இது குறித்து பிரபாகரனிடம்
கேட்டபோது, விமலை மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், காசோலை
மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி செய்ததாக, உயர் நீதிமன்றத்தில் விமல் வழக்கு
தொடர்ந்தார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, பிரபாகரனை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.