/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 24, 2025 03:37 AM

சென்னை:சென்னை, கவுரிவாக்கம், பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த இவ்விழாவிற்கு, பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.
தாம்பரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினர்.
சென்னை பல்கலை தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற பவித்ரா, ஸ்வேதா, கவுரிபிரியா, இந்து, ஜன்னதுல்பிர்தவுஸ், சரஸ்வதி, தீபிகா உள்ளிட்ட எட்டு மாணவியர்; சிறப்பிடம் பிடித்த 27 இளங்கலை மற்றும் ஏழு முதுகலை மாணவர்கள் உட்பட 755 பேருக்கு பதக்கம், பட்டம் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பிரின்ஸ் கல்வி குழுமங்களின் துணைத் தலைவர்கள் விஷ்ணுகார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், கல்லுாரி முதல்வர் கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.