/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினமும் 30 தெரு நாய்களுக்கு கருத்தடை இனவிருத்தி தடுக்க மாநகராட்சி முயற்சி
/
தினமும் 30 தெரு நாய்களுக்கு கருத்தடை இனவிருத்தி தடுக்க மாநகராட்சி முயற்சி
தினமும் 30 தெரு நாய்களுக்கு கருத்தடை இனவிருத்தி தடுக்க மாநகராட்சி முயற்சி
தினமும் 30 தெரு நாய்களுக்கு கருத்தடை இனவிருத்தி தடுக்க மாநகராட்சி முயற்சி
ADDED : மே 15, 2025 12:16 AM
சென்னை : சென்னையில் தெரு நாய்கள் எண்ணிக்கை, 1.80 லட்சத்தை தாண்டியுள்ளது. அவற்றை கட்டுப்படுத்தும் வகையில், தினமும் 30 நாய்களுக்கு கருத்தடை செய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், 1.80 லட்சம் தெருநாய்கள், 20,000க்கும் மேலான வளர்ப்பு நாய்கள் என, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. ஆனால், 9,883 வளர்ப்பு நாய்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
தெருநாய்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கடித்து குதறும் நிகழ்வுகள் தொடர்கின்றன. சமீபத்தில், பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, வளர்ப்பு நாய் கடித்த சம்பவமும் நடந்தது.
தொடர்ந்து நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி சார்பில், மண்டலத்திற்கு ஒரு நாய் இனகட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது, புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை ஆகிய இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தலா, 30 நாய்கள்; மீனம்பாக்கம், 15, சோழிங்கநல்லுாரில், 10 நாய்களுக்கு தினமும் கருத்தடை செய்யும் வசதி உள்ளது.
தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக, 16 நாய் பிடிக்கும் வாகனங்கள், 78 பணியாளர்கள், 23 கால்நடை உதவி டாக்டர்கள், நான்கு கால்நடை டாக்டர்கள் உள்ளனர்.
இந்த வசதிகளை வைத்த, குறைந்தது தினமும் 30 நாய்களை பிடித்து, கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சியில், 2021ம் ஆண்டு முதல் இதுவரை, 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 1.08 லட்சம் நாய்களுக்கு, வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மற்ற தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வது, வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடுவது, மைக்ரோ சிப் பொருத்துவது ஆகிய பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
அதன்படி, ஜூன் மாதத்தில் இருந்து, தடுப்பூசி போடும் பணி துவக்கப்படும். இதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கண்ணம்மாபேட்டையில் செல்லப்பிராணிகளுக்கான விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் துவங்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***