/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் வளர்ச்சி பணிகள் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
/
தாம்பரத்தில் வளர்ச்சி பணிகள் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
தாம்பரத்தில் வளர்ச்சி பணிகள் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
தாம்பரத்தில் வளர்ச்சி பணிகள் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
ADDED : மே 08, 2025 12:25 AM
தாம்பரம்,
தாம்பரம், சானடோரியம் பகுதியில், 43.40 கோடி ரூபாய் மதிப்பில், தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை, மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அதன்பின், திருநீர்மலையில் 1.70 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகக் கட்டட பணி, 9.70 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் எடைமேடை கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.
அனகாபுத்துார், எஸ்.பி.ஐ., நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாளச் சாக்கடை திட்டப்பணி, காமராஜபுரத்தில் 1.47 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
அனகாபுத்துார் பகுதியில் செயல்பட்டு வரும் கழிவுநீரேற்று நிலைய பணி மற்றும் மாநகராட்சியில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.