/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீராங்கல் ஓடையை ஆக்கிரமித்து கடை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்
/
வீராங்கல் ஓடையை ஆக்கிரமித்து கடை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்
வீராங்கல் ஓடையை ஆக்கிரமித்து கடை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்
வீராங்கல் ஓடையை ஆக்கிரமித்து கடை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்
ADDED : ஜன 28, 2026 06:12 AM

புழுதிவாக்கம்: பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்குள்ள, வீராங்கல் ஓடை, இப்பகுதியின் மழைநீரை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வேளச்சேரி - பரங்கிமலை சாலையில், புழுதிவாக்கம் பகுதியில் வீராங்கல் ஓடையின் மேல் பகுதியை இரும்பு ராடுகளால் மூடி வழித்தடமும், கடையும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் கூறியதாவது:
வீராங்கல் ஓடையை ஒட்டி, ஏராளமான கடைகள், வீடுகள், குடியிருப்புகள் அமைந்துள்ளன. அவற்றுக்கு நேரடி வழித்தடம் இல்லாததால், ஆங்காங்கே, 10 முதல் 15 அடி நீளத்தில், இரும்பால் ஆன தரைப்பாலம் அமைத்துள்ளனர்.
சில இடங்களில், இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக 50 மற்றும் 100 அடி நீளத்திற்கு தரைப்பாலம் அமைத்துள்ளனர். தவிர, 25 அடி நீளம், 15 அடி அகலத்தில், வீராங்கல் ஓடையின் மேல், தரைப்பாலம் அமைத்து, அதில் பெரிய அளவிலான பழக்கடை அமைத்து, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, மின் இணைப்புடன் கடையை நடத்தி வருகிறார்.
இதனால், மழைக்காலத்திற்கு முன், இந்த ஓடையில் சேகரமாகும் கழிவுகளை, வாகனங்களின் மூலம் அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்றவில்லை எனில், நீரோட்டம் தடைபட்டு, ஊருக்குள் நீர் புகுந்து, குடியிருப்புகளை வெள்ளம் சூழும் நிலை ஏற்படும்.
இதுகுறித்து பல முறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், குறிப்பிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

