/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாரத்தில் மூன்று முறை ஆய்வு செய்து கட்டட கழிவுகளை அகற்ற வேண்டும் ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி உத்தரவு

ADDED : ஜூலை 23, 2025 11:50 PM
சென்னை :'சென்னையில் அனைத்து பகுதிகளிலும், வாரத்தில் மூன்று முறை ஆய்வு செய்து, கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவை அகற்ற வேண்டும்' என, பிரீமியர் பிரிசிசன் சர்பேஸ் நிறுவனத்திற்கு, மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள கட்டட மற்றும் இடிபாட்டு கழிவுகளை, பிரீமியர் பிரிசிசன் சர்பேஸ் நிறுவனம் அகற்றி வருகிறது. இப்பணிக்களுக்காக, 168 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
தினமும் சராசரியாக 1,000 டன் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஜன., 7 முதல் இதுவரை, 22 லட்சம் டன் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இவை, கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்கிற்கு அனுப்பி, தனித்தனியாக பிரித்தெடுத்து, மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.
ஒப்பந்ததாரர் அனைத்து பகுதிகளையும், வாரத்தில் மூன்று முறை ஆய்வு செய்து, கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை அகற்றி, சாலையை துாய்மையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த பணிகளுக்கு வசதியாக, சென்னை மாநகராட்சி செயலி வடிவமைக்கப்பட்டு, அதன் வாயிலாக இருப்பிடங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி, கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு, அதன்பின் எடுக்கப்பட்ட புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாக பகுதிகளில், கட்டட கழிவு கொட்டப்பட்டு, நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருப்பது, முற்றிலும் தவிர்க்கப்பட்டு வருகிறது.
விதிமீறி கழிவுகளை கொட்டியவர்களிடம் இருந்து, 39.30 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கட்டட கழிவு அகற்றுவது தொடர்பாக, 1913 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.