/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி சொத்து வரி ரூ.1,270 கோடி வசூல்
/
மாநகராட்சி சொத்து வரி ரூ.1,270 கோடி வசூல்
ADDED : பிப் 15, 2024 12:52 AM
சென்னை, சென்னை மாநகராட்சி 2023 - 24ம் நிதியாண்டில், 1,650 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த நிதியாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முடிவடைவதால், சொத்து வரி வசூலிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை 1,270 கோடி ரூபாய் என, 70 சதவீதம் சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்த நிதியாண்டில் 80 சதவீதமாவது சொத்து வரியை வசூலிக்க, நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சொத்து வரி வசூலிப்பில் ஒன்றரை மாதங்களில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தொகை வசூலிக்கப்பட்டு விடும். பல்வேறு காரணங்களால், 250 கோடி ரூபாய் வரை வசூலிப்பதில் சிக்கல் இருக்கும். இதற்கு தீர்வு கண்ட பின், 100 சதவீதம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

