/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்குடி குப்பை கிடங்கில் பல்லுயிர் பூங்கா திட்டம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
/
பெருங்குடி குப்பை கிடங்கில் பல்லுயிர் பூங்கா திட்டம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
பெருங்குடி குப்பை கிடங்கில் பல்லுயிர் பூங்கா திட்டம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
பெருங்குடி குப்பை கிடங்கில் பல்லுயிர் பூங்கா திட்டம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
ADDED : நவ 29, 2024 12:26 AM

சென்னை, பெருங்குடி குப்பை கிடங்கில் திட்டமிடப்பட்ட பல்லுயிர் பூங்கா, பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கைவிடுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், 103வது வார்டு கவுன்சிலர் புஷ்பலதா பேசுகையில், ''அண்ணா நகர் டவர் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் சிலர், நீண்ட நேரம் அமர்ந்து கொள்கின்றனர். இதனால், இடையூறு ஏற்பட்டு வருகிறது. இவற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு மேயர் பிரியா அளித்த பதிலில், ''பொதுமக்கள் பயன்படுத்த தான், இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். காவலாளி நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் நீண்ட நேரம் இருக்காத வகையில் சரிசெய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,'' என்றார்.
வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் பேசியதாவது:
எம்.எல்.ஏ., - எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியை ஐந்தாண்டில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல், கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை, ஓரிரு ஆண்டுகள் சேர்த்து வைத்து வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
சென்னையில், 595 பூங்காக்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம் கோர மாநகராட்சி எடுத்துவரும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஏற்கனவே, இதுபோல் வழங்கப்பட்டப்போது புகார் எழுந்தது.
சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை தவறாக பயன்படுத்துகின்றனர். ஒரே குடும்பத்தில், 10 அடையாள அட்டை வரை வைத்துள்ளனர். அவர்கள், மற்றவர்களிடம் வாடகை அடிப்படையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கின்றனர். இவற்றை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு முதலில் பதிலளித்த கமிஷனர் குமரகுருபரன், ''வார்டு மேம்பாட்டு நிதியை ஐந்தாண்டுக்குள் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து தெரிவிக்கப்படும்,'' என்றார்.
பின், மேயர் பிரியா அளித்த பதில்:
இதற்கு முன், மண்டல வாரியாக பூங்கா பராமரிப்பு விடப்பட்டிருந்தது. பின், ஏராளமான புகார்கள் வந்ததால், வட்டார அளவில், தனியாரிடம் பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. தற்போது உங்களது கோரிக்கையை அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும்.
ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று நபர்கள் சாலையோர கடை நடத்துவதற்கான அடையாள அட்டை வைத்திருப்பது, போலி அடையாள அட்டை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும். மீண்டும் அவர்களுக்கு, சாலையோர வியாபாரத்திற்கான அடையாள அட்டை வழங்கப்படாது.
அம்மா உணவகங்களில் ஏற்படும் புகார்களுக்கு தீர்வு காண, 'சிசிடிவி கேமரா' அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சியில் உள்ள, 8,340 உட்புற மற்றும் பேருந்து தட சாலைகளில் உள்ள பெயர் பலகைகளை, 15 கோடி ரூபாய் மதிப்பில் டிஜிட்டல் முறையில் மாற்றி அமைக்க மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்தது.
இதற்கு பெயர் பலகைகளை, கவுன்சிலர்கள் அமைத்து கொள்கிறோம் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தால், அத்தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.