/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆலந்துார் மருத்துவ மையங்களில் நாய் கடிக்கு மருந்து பற்றாக்குறை மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
/
ஆலந்துார் மருத்துவ மையங்களில் நாய் கடிக்கு மருந்து பற்றாக்குறை மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
ஆலந்துார் மருத்துவ மையங்களில் நாய் கடிக்கு மருந்து பற்றாக்குறை மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
ஆலந்துார் மருத்துவ மையங்களில் நாய் கடிக்கு மருந்து பற்றாக்குறை மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஆக 12, 2025 12:54 AM
ஆலந்துார், ''புதிதாக திறக்கப்பட்ட மருத்துவ மையங்களில், நாய் கடிக்கு மருந்து, ஊசி பற்றாக்குறை உள்ளது,'' என, ஆலந்துார் மண்டல குழு கூட்டத்தில், கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
ஆலந்துார் மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ், செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
செல்வேந்திரன், தி.மு.க., 56வது வார்டு: விடுபட்ட சாலைகளை விரைவில் அமைக்க வேண்டும். பூங்காக்களில், குப்பை குவிந்துள்ளது. சமீபத்தில் திறக்கப்பட்ட குளத்தில், இருக்கை, மின் விளக்கு வசதி செய்யப்படவில்லை .
பாரதி, தி.மு.க., 158வது வார்டு: துளசிங்கபுரத்தில் சுடுகாடு பராமரிப்பின்றி உள்ளது. அப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்ற வேண்டும்.
அமுதப்பிரியா, தி.மு.க., 159வது வார்டு: புதிதாக திறக்கப்பட்ட மருத்துவ மையங்களில், நாய் கடிக்கு மருந்து, ஊசி இல்லாததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. குடிநீர் வாரியத்திடம் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
பி ருந்தாஸ்ரீ, தி.மு.க., 160வது வார்டு: புதிதாக இணைக்கப்பட்ட பகுதிக்கு, வடிகால்வாய் இணைப்பு கேட்டு கோரிக்கை வைத்து நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வடிகால்வாய்களை துார்வாரும் பணியை, தொடர் மழைக்கு முன் விரைந்து முடிக்க வேண்டு ம்.
சாலமோன், தி.மு.க., 162வது வார்டு: மாரீசன் தெருக்களில் மழைநீர் செல்ல, வடிகால்வாய்க்கு ஐந்தாவது தெருவில் மாற்று பாதை அமைக்க வேண்டும். மின் கம்பங்களில் மாடுகளை கட்டி, தீனி போடுவதால் சாலைகள் சுகாதாரமற்று உள்ளன.
பூங்கொடி, தி.மு.க., 163வது வார்டு: மஸ்தான் கோரி தெருவில், மழைநீர் வடிகால்வாய் பணியை, ஒப்பந்ததாரர் பாதியில் நிறுத்தியுள்ளார். விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை.
தேவி, தி.மு.க., 164-வது வார்டு: வார்டில் கட்டப்படும் கடைகளுக்கு, வீட்டு வரி விதிக்கப்படுகிறது. அதை சரி செய்ய வேண்டும். மெட்ரோ குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.
துர்காதேவி, தி.மு.க., 167வது வார்டு: டி.என்.ஜி.ஓ., - ஸ்டேட் பேங்க் காலனி பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அங்கு, பருவமழைக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வார்டு முழுதும், நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
மண்டல குழு தலைவர் சந்திரன் பேசியதாவது:
கவுன்சிலர்களின் கோரிக்கைகளை, அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்றி தர வேண்டும். ஒவ்வொரு மாதமும், குடிநீர் பிரச்னை குறித்தே கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குடிநீர் வாரியம் தனி கவனம் செலுத்த வேண்டும். மழைக்காலம் துவங்க உள்ளதால், கொசு மருந்து அடிப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.