/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்குடி மண்டல குழு கூட்டத்தில் புகார்களை அடுக்கிய கவுன்சிலர்கள்
/
பெருங்குடி மண்டல குழு கூட்டத்தில் புகார்களை அடுக்கிய கவுன்சிலர்கள்
பெருங்குடி மண்டல குழு கூட்டத்தில் புகார்களை அடுக்கிய கவுன்சிலர்கள்
பெருங்குடி மண்டல குழு கூட்டத்தில் புகார்களை அடுக்கிய கவுன்சிலர்கள்
ADDED : பிப் 13, 2025 12:26 AM
புழுதிவாக்கம், சென்னை மாநகராட்சியின் 14வது மண்டலமான பெருங்குடியில், மண்டல குழு தலைவர் தி.மு.க.,வின் ரவிச்சந்திரன் தலைமையில், நேற்று நடந்தது.
இதில், மாநகராட்சி நிர்வாகம் மீது, கவுன்சிலர்கள் பல புகார்களைக் கூறினர்.
மாறுதலாகி சென்ற ஊழியர்களுக்கு பதிலாக, புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், பெருங்குடி ஏரியை சீரமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படவில்லை எனவும், 182வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் சதீஷ்குமார் குற்றஞ்சாட்டினார்.
மேலும், வரி வசூலிப்பதிலும் மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை என, புகார் கூறினார்.
சீனிவாசன் நகரில், பயன்பாட்டில் இல்லாத ஆவின் பாலகத்தை அகற்ற வேண்டும் என, 185வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் சர்மிளா தேவி கோரிக்கை வைத்தார்.
மந்தைவெளி சாலையில், மெட்ரோ பணிக்காக பள்ளம் தோண்டும் போது, குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் கனஅடி நீர் வீணாக போவதாக, 186வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மணிகண்டன் வேதனை தெரிவித்தார்.
அரசு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள, 18 தனியார் 'மொபைல் போன்' கோபுரங்களுக்கு வரி வசூலிப்பது இல்லை எனவும், வணிக கட்டடங்களுக்கும் குடியிருப்புகளுக்கான வரி தொகையை வசூலிப்பதால், வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், 190வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சிவபிரகாசம் கூறினார்.
பாலாஜி நகரில் மெட்ரோ, மின்சார பணிகள் முடிந்துள்ள நிலையில், 'மினி பஸ்' விட ஏற்பாடு செய்ய வேண்டும் என, 188 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சமீனா செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பின், அனைத்துப் புகார்கள் மீதும், நாளை முதல் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறினார்.
பின், ஒருமனதாக, 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.