/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எலி மருந்து சாப்பிட்ட தம்பதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பு
/
எலி மருந்து சாப்பிட்ட தம்பதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பு
எலி மருந்து சாப்பிட்ட தம்பதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பு
எலி மருந்து சாப்பிட்ட தம்பதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பு
ADDED : ஜன 08, 2025 08:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி:சோழிங்கநல்லுார் பாரதி தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ், 37. ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரின் மனைவி ஜெயபிரேமா, 35.
இவர்களுக்கு திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இதுகுறித்து, உறவினர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பியுள்ளனர். இதில் மனமுடைந்த தம்பதி, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
உறவினர்கள் இருவரையும் மீட்டு, சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.