/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ்சில் 'பிக் பாக்கெட்' வேலுார் தம்பதி கைது
/
பஸ்சில் 'பிக் பாக்கெட்' வேலுார் தம்பதி கைது
ADDED : மார் 15, 2025 11:55 PM
தாம்பரம், வேலுாரில் இருந்து தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்திற்கு வரும் அரசு பேருந்துகளில், பயணியரின் பையில் இருக்கும் நகை, பணம் திருடு போவதாக, தாம்பரம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த லட்சுமி, 45, என்பவர், தாம்பரம் வந்தபோது, கைப்பையில் வைத்திருந்த 3 சவரன் நகை காணாமல் போனது. இது தொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, வேலுாரை சேர்ந்த வள்ளி, 40, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், திருடிய நகைகளை, வேலுார் குடியாத்தத்தைச் சேர்ந்த இரண்டாவது கணவர் உதயகுமார், 42, என்பவர் உதவியுடன், விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, உதயகுமாரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து, இரண்டே முக்கால் சவரன் நகை, 45,000 ரூபாய், 120 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.