/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது
/
வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது
வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது
வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது
ADDED : ஆக 01, 2025 12:25 AM

சென்னை, வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி, 16 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.
கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் அழகுபாண்டியன், 29. அவர் தனியார் நிறுவனத்தில், கீழ்ப்பாக்கம் பகுதி வினியோகஸ்தராக பணியாற்றி வருகிறார்.
அவருக்கு, முகநுால் வாயிலாக அறிமுகமான கீர்த்தனா, அவரது கணவர் பிரபு இன்பதாஸ் ஆகியோர் தொழில் அபிவிருத்திக்காக, வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறியுள்ளனர்.
இதை உண்மை என நினைத்த அழகுபாண்டியன், அவர்களிடம் பல தவணையாக, 16 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற தம்பதி, வங்கி கடன் பெற்றுத்தரவில்லை; வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. மொபைல் போனில் அழைப்புக்களை ஏற்காமல் தவிர்த்தனர்.
இதுகுறித்து, அழகுபாண்டியன் அளித்த புகாரில், கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, 16 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த, முடிச்சூரை சேர்ந்த பிரபு இன்பதாஸ், 44, அவரது மனைவி கீர்த்தனா, 30 ஆகிய இருவரையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஐ-போன் உட்பட, மூன்று மொபைல் போன்கள், ஐ - பேட் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.