/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ. 63 லட்சம் மோசடி முகப்பேர் தம்பதி கைது
/
ரூ. 63 லட்சம் மோசடி முகப்பேர் தம்பதி கைது
ADDED : மார் 18, 2025 12:43 AM

ஆவடி,மாதவரம் பால் பண்ணை, பேங்க் காலனி, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தனசேகர், 37. இவர், ஜன., 22ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்:
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், 'டீம் லீடர்' ஆக பணிபுரிந்து வருகிறேன். அந்த நிறுவன மேலாளர் மோகன பெருமாள், அவரது மனைவி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து, தன் மாமா பெண் திருமணத்திற்கு, 115 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் கொடுக்க வேண்டும் எனக்கூறி, என்னிடம் உதவி கேட்டனர்.
அதன்படி, என்னுடைய 10 கிரெடிட் கார்டு வாயிலாக, தங்க நகை கடைகளில், 1.07 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்கள் வாங்கியுள்ளார்.
பணத்தை திருப்பி கேட்ட போது, ஆன்லைன் வாயிலாக, 43 லட்சம் ரூபாய் அனுப்பிவிட்டு, மீதி பணத்தை தர முடியாது என்றனர். மோசடி செய்து, 63.74 லட்சம் ரூபாய் ஏமாற்றியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரித்த, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த முகப்பேர் கிழக்கை சேர்ந்த மோகன பெருமாள், 42, அவரது மனைவி ஸ்ரீதேவி, 37 ஆகிய இருவரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
***