/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி நகை அடமானம் வைத்த தம்பதி கைது
/
போலி நகை அடமானம் வைத்த தம்பதி கைது
ADDED : ஆக 05, 2025 12:16 AM
ராயபுரம், போலி நகையை அடமானம் வைத்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.
பெரியமேடு பகுதியைச் சேர்ந்த விமல்குமார், 57, ராயபுரம், ஆடுதொட்டி பகுதியில், அடகு கடை நடத்தி வருகிறார். கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதம் இவரது கடைக்கு வந்த தம்பதி, 25 சவரன் தங்க நகைகளை வைத்து, 10 லட்ச ரூபாய் பெற்றுள்ளனர்.
பின், அடகுக்கடைக்காரர் நகைகளை சோதனையிட்ட போது, அவை போலியானது என தெரியவந்தது. இது குறித்து, தம்பதியிடம் கேட்டபோது, பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்.
ஆனால், பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளனர். இது குறித்து விமல்குமார், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தார். விசாரித்த ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்ட ராயபுரம், ஆஞ்சநேயர் நகரைச் சேர்ந்த சீனிவாசலு, 60, அவரது மனைவி அம்சலட்சுமி, 57, ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.