UPDATED : அக் 09, 2026 04:09 PM
ADDED : அக் 09, 2026 04:06 PM

திருவொற்றியூர்: மனைவி உயிரிழந்த தகவலை அறிந்து, அடுத்த சில மணி நேரங்களிலே கணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் தெரு, என்.டி.ஓ., குப்பத்தைச் சேர்ந்தவர் பக்கிரி, 75; காவலாளி.
இவரது மனைவி குப்புலட்சுமி, 69. இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2ம் தேதி, முதியவர் பக்கிரி, நுரையீரல் தொற்று காரணமாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இதையறிந்து, நேற்று முன்தினம் அவரை பார்ப்பதற்காக, வீட்டிலிருந்து புறப்பட்ட அவரது மனைவி குப்புலட்சுமி, திடீரென உயிரிழந்தார். அவர், உயிரிழந்த சில மணி நேரங்களில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பக்கிரியும், உயிரிழந்தார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
