/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழையால் இறக்குமதி முந்திரி சேதம்;ரூ.2.49 கோடி வழங்க கோர்ட் உத்தரவு
/
மழையால் இறக்குமதி முந்திரி சேதம்;ரூ.2.49 கோடி வழங்க கோர்ட் உத்தரவு
மழையால் இறக்குமதி முந்திரி சேதம்;ரூ.2.49 கோடி வழங்க கோர்ட் உத்தரவு
மழையால் இறக்குமதி முந்திரி சேதம்;ரூ.2.49 கோடி வழங்க கோர்ட் உத்தரவு
ADDED : செப் 30, 2025 02:12 AM
சென்னை:மழையால், இறக்குமதி செய்யப்பட்ட முந்திரி சேதமானதால் பாதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு, 2.49 கோடி ரூபாய் காப்பீட்டு தொகை; சேவை குறைபாடுக்கு, 10 லட்சம் ரூபாயை காப்பீடு நிறுவனம் வழங்க, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:
ஆப்ரிக்காவில் இருந்து முந்திரி இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 2023 டிசம்பரில், ஆப்ரிக்காவில் இருந்து ஐந்து கன்டெய்னரில் முந்திரி இறக்குமதி செய்தேன்.
துாத் துக்குடியில் பெய்த பலத்த மழையால், இறக்குமதி செய்யப்பட்ட முந்திரி முழுதும் சேதமடைந்தது. இறக்குமதி பொருள்களுக்கு காப்பீடும் செய்யப்பட்டு உள்ளது.
காப்பீடு தொகையை கோரி விண்ணப்பித்தேன். காப்பீடு நிறுவனம் தரப்பில், 2.37 லட்சம் ரூபாய்; தற்செயல் செலவாக 12 லட்சம் ரூபாய் என, 2.49 கோடி ரூபாய் சேதம் கணக்கிடப்பட்டது.
இருப்பினும், இந்த சேதத்துக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என, காப்பீடு நிறுவனம் தெரிவித்தது.
நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபட்ட காப்பீடு நிறுவனம், சேதத்துக்கான காப்பீடு தொகையுடன், சேவை குறைபாடுக்கு, 25 லட்சம் ரூபாய், வழக்கு செலவாக, 10,000 ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்ற தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
காப்பீடு நிறுவனம் தர ப்பில், 'பொருள் இறுதியாக சேருமிடம் துாத்துக்குடி என, காப்பீடு பெறும்போது, நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், கிடங்கு அல்லது சரக்கு பெட்டக முனையம் என்று குறிப்பிடவில்லை.
'காப் பீட்டு சான்றிதழ்படி, துாத்துக்குடி துறைமுகத்தை இறுதி சேருமிடம் என்று குறிப்பிடப்படுவதால், கிடங்குகளில் ஏற்பட்ட பொருள்களின் சேதத்துக்கு பொறுப்பு ஏற்க முடியாது' என, பதிலளிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏ ற்க மறுத்த நீதிமன்றம், 'ஆவணங்களை பரிசீலித்ததில், புகார்தாரர், பொருட்கள் சேதத்திற்கு காப்பீடு பெற தகுதி உள்ளது எனக்கூறி, 2.49 கோடி ரூபாய்; சேவை குறைபாட்டுக்கு, 10 லட்சம் ரூபாய்; வழக்கு செல வாக 10,000 ரூபாயை, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.