sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

10 ஆண்டுகளில் மாணவர்கள் மோதல் வழக்குகளை பட்டியலிட நீதிமன்றம் உத்தரவு

/

10 ஆண்டுகளில் மாணவர்கள் மோதல் வழக்குகளை பட்டியலிட நீதிமன்றம் உத்தரவு

10 ஆண்டுகளில் மாணவர்கள் மோதல் வழக்குகளை பட்டியலிட நீதிமன்றம் உத்தரவு

10 ஆண்டுகளில் மாணவர்கள் மோதல் வழக்குகளை பட்டியலிட நீதிமன்றம் உத்தரவு


ADDED : நவ 15, 2024 01:28 AM

Google News

ADDED : நவ 15, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவள்ளூர் மாவட்டம், பொன்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் சுந்தர். சென்னை மாநில கல்லுாரியில், பி.ஏ., அரசியல் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த மாதம் 4ல், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்.

ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர், கடந்த மாதம் 9ல் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஏழு பேரை கைது செய்த பெரியமேடு போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இவர்களில், ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் மற்றும் சந்துரு ஆகியோர், ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மாணவர்களின் பெற்றோரை ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களின் பெற்றோர் ஆஜராகினர்.

அப்போது, கூடுதல் அரசு வழக்கறிஞர் அருள் செல்வம் ஆஜராகி, ''குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களின் கல்லுாரி வருகை பதிவு ஒரு சதவீதம் கூட இல்லை,'' என்றார்.

மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தினக்கூலிகள். ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ''சிறையில் உள்ள மாணவர்கள் குறித்து மட்டும் கவலைப்படும் நீங்கள், மகனை இழந்திருக்கும் பெற்றோர் குறித்து ஏன் கவலைப்படவில்லை?'' என, கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

வருகை பதிவேட்டை வைத்து பார்க்கும் போது, குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் பொறுப்பான மாணவர்களாக தெரியவில்லை. இறந்த மாணவன், கோடீஸ்வர் வீட்டு பையன் கிடையாது.

கூலி வேலை செய்யும் பெற்றோரின் மகன். அதுகுறித்து உணரவே, குற்றம்சாட்டப்பட்ட மாணவர்களின் பெற்றோரை ஆஜராக உத்தரவிடப்பட்டது.

பஸ் மற்றும் ரயில் தினம் கொண்டாடும்போது, மாணவர்கள் இடையே பிரச்னை உருவாகிறது. மாணவர்கள், தங்கள் கல்லுாரிகளுக்கு செல்ல விமான சேவை இல்லாதது ஒரு வகையில் நல்லது.

கடந்த ஆண்டுகளில், அடி தடி சம்பவங்களாக இருந்தது, தற்போது கொலை சம்பவமாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சென்னையில், கடந்த 10 ஆண்டுகளில், மாணவர்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக, காவல்துறை மற்றும் ரயில் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்கள், எத்தனை வழக்குகளில் தண்டனை மற்றும் சமரசத்தில் முடிந்த வழக்குகள் உள்ளிட்டவை குறித்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

கல்லுாரி மாணவர்கள்

மின்சார ரயிலில் அட்டகாசம்திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி, நேற்று காலை சென்ற மின்சார ரயிலில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் சிலர் பயணம் செய்துள்ளனர்.வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே ரயில் நின்ற போது, 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் இறங்கி, 'திருத்தணி ரூட்டுக்கு ஜெ... எல்.ஐ.சி., ஹயிட்டு... பச்சையப்பாஸ் வெயிட்டு' என கோஷமிட்டுள்ளனர்.பின், ரயில் புறப்பட்டதும், பக்கவாட்டில் தாளமிட்டுக் கொண்டே, கானா பாடல்கள் பாடியதுடன், ஜன்னல் மீது ஏறி நின்றும், நடைமேடையில் கால்களை தேய்த்தபடியும், ஆபத்தான நிலையில் பயணித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us