/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து மாடு பலி
/
மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து மாடு பலி
மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து மாடு பலி
மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து மாடு பலி
ADDED : ஏப் 30, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் அருகே சோமங்கலம் ஊராட்சி, மேலாத்துார் பகுதியை சேர்ந்த பக்தவாச்சலம் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, அதே பகுதியில், நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றது.
அப்போது, மேலாத்துார், அருந்ததியர்பாளையம் பகுதிக்கு செல்லும் மின் கம்பி, திடீரென அறுந்து கீழே விழுந்தது.
எதிர்பாராமல் அறுந்து விழுந்த மின் கம்பி உரசியதில், பசு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது.
இந்நிலையில், மின் கம்பிகள் மீது உரசிக்கொண்டிருக்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தினர்.