ADDED : ஆக 31, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
திருவேற்காடு: திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம், விஜயாநகர், மூன்றாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில், உணவு தேடி நேற்று அங்கு வந்த பசுமாடு, தொட்டி அமைக்க தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்தது. இதைக்கண்ட வீட்டைச் சேர்ந்தோர், அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், 20 நிமிட போராட்டத்துக்குப் பின், குழிக்குள் விழுந்த பசுமாட்டை ‘பெல்ட்’ கட்டி மேலே துாக்கி பத்திரமாக மீட்டனர்.
