/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விரைவு ரயிலில் சிக்கிய மாடு கும்மிடி தடத்தில் சேவை பாதிப்பு
/
விரைவு ரயிலில் சிக்கிய மாடு கும்மிடி தடத்தில் சேவை பாதிப்பு
விரைவு ரயிலில் சிக்கிய மாடு கும்மிடி தடத்தில் சேவை பாதிப்பு
விரைவு ரயிலில் சிக்கிய மாடு கும்மிடி தடத்தில் சேவை பாதிப்பு
ADDED : ஆக 23, 2025 12:36 AM
பொன்னேரி,விரைவு ரயிலில் மாடு சிக்கியதால், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்லும் 'சர்க்கார் எக்ஸ்பிரஸ்' ரயில், நேற்று இரவு கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடம் வழியாக பயணித்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு, மீஞ்சூர் - அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, மாடு ஒன்று விரைவு ரயிலில் சிக்கியது.
இதையடுத்து, பொன்னேரி நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் ரயில் நிறுத்தப்பட்டு, இன்ஜினின் அடிப்பகுதி, ரயில் சக்கரங்கள் உள்ளிட்ட பகுதிகளை சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால், அடுத்தடுத்து வந்த விரைவு மற்றும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. வடமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் மட்டும், பொன்னேரி ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடை வழியாக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
சர்க்கார் எக்ஸ்பிரஸ் சோதனை பணிகள் முடிந்து, இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதையடுத்து, ஒரு மணிநேர பாதிப்பிற்குபின், ரயில் சேவை சீரான து.
2 மின்சார
ரயில்கள் ரத்து
கடற்கரை ரயில்வே யார்டில் தண்டவாளம் மேம்பாட்டு பணி நடப்பதால், சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. வேளச்சேரி - கடற்கரை இரவு 9:40 மணி ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது. கடற்கரை - வேளச்சேரி அதிகாலை 5:00 மணி ரயில், நாளை ரத்து செய்யப்படுகிறது என, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

