/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்குடி மண்டலத்தில் ரூ.2.5 கோடியில் கோசாலை
/
பெருங்குடி மண்டலத்தில் ரூ.2.5 கோடியில் கோசாலை
ADDED : மார் 27, 2025 11:38 PM
பெருங்குடி, சென்னை மாநராட்சியின் பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில், அதிக அளவில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அவை, பால் கறக்கும் நேரம் தவிர, சாலையில் அவிழ்த்து விடப்படுகின்றன.
இதனால், விபத்துகளும், வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. சென்னை நகரில் நடந்த பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில், மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும், கோசாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பெருங்குடி மண்டலத்தில், 2.5 கோடி ரூபாய் மதிப்பில் கோசாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெருங்குடி மண்டலம், 184வது வார்டு பெருங்குடி, வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில் கோசாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக, 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 11,000 சதுர அடியில் அமைக்கப்படும் இந்த கோசாலையில், 160 மாடுகளை பராமரிக்கலாம்.
கோசாலைக்கான பணிகள் துவக்கப்பட்டு, ஒரு சில மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
அதேபோல, கோசாலைக்கு அருகில், 1.6 கோடி ரூபாயில் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. அதில், 26 அறைகள், மருத்துவர் அறை, அறுவை சிகிச்சை அறை, ஆய்வகம் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.
தற்போது, சோழிங்கநல்லுார் மண்டலத்தில் உள்ள ஏ.பி.சி., மையத்தில், பெருங்குடி மண்டலத்தில் உள்ள நாய் உள்ள விலங்குகளுக்கு, பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிசிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு மையம் அமைக்கப்பட்டவுடன், அந்த பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

