/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரிக்கெட் லீக் இந்தியன் வங்கி அபாரம்
/
கிரிக்கெட் லீக் இந்தியன் வங்கி அபாரம்
ADDED : அக் 18, 2024 12:20 AM

சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன.
இதில், இரண்டாவது டிவிஷனில், முதலில் பேட் செய்த இந்தியன் வங்கி அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 285 ரன்களை அடித்தது.
அணியின் வீரர் பாஷா, 126 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் என, 112 ரன்களை அடித்தார்.
அடுத்து களமிறங்கிய, தெற்கு ரயில்வே இன்ஸ்டிடியூட் அணி, 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களை எடுத்தது.
இந்தியன் வங்கி வீரர் விக்னேஷ், ஆறு விக்கெட் எடுத்து, 32 ரன்களை கொடுத்தார். இதனால், 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.
நான்காவது டிவிஷன் ஆட்டத்தில் முதலில் பேட்செய்த, விக்னேஷ்வரா சி.சி., அணி, 49.2 ஓவர்களில் 210 ரன்களை அடித்தது. எதிர் அணியின் வீரர் சஜ்ஜத் ஹூசைன் ஆறு விக்கெட் எடுத்து, 29 ரன்களை கொடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த, வெங்கடேஸ்வரா சி.சி., அணி, 45.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 210 ரன்கள் எடுத்து 'டிரா' செய்தது.