ADDED : அக் 18, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
சென்னை: கனமழையால், பல்வேறு இடங்களில் நேற்று நடக்கவிருந்த ‘டிவிஷன்’ கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், ஆவடி மற்றும் பட்டாபிராமில் நடக்கின்றன. அதன்படி, நேற்று காலை சென்னை பெட்ரோலியம் – யுனிவர்செல்; இந்து கல்லுாரி – பியூச்சர் ஸ்டார் உள்ளிட்ட அணிகள் மோத இருந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளுத்து வாங்கிய கனமழையால், போட்டிகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன. அதேபோல், டி.என்.சி.ஏ.,வின் பல்வேறு டிவிஷன் லீக் ஆட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
