UPDATED : அக் 18, 2026 03:51 PM
ADDED : அக் 18, 2026 03:47 PM

அ நிறம் | அளவு
சென்னை: கிண்டியில் வரும் 23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. தகுதியானோர் பங்கேற்று பயன்பெறலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, வரும் 23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. முகாம், கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், காலை 10:00 முதல் 2:00 மணி வரை நடக்கிறது.
இதில், எட்டாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரையிலான அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது என, சென்னை கலெக்டர் மலாதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
