தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/காசிமேடில் மீன்கள் வரத்து குறைவால் விலை விர்ர்ர்...

காசிமேடில் மீன்கள் வரத்து குறைவால் விலை விர்ர்ர்...

காசிமேடில் மீன்கள் வரத்து குறைவால் விலை விர்ர்ர்...


ADDED : அக் 18, 2026 04:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 04:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காசிமேடு: மழை காரணமாக, காசிமேடில் மீன்கள் வரத்து குறைவாக இருந்த நிலையில், விலை கனிசமாக உயர்ந்து விற்பனையாது. தொடர் விடுமுறையால், மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால், சில்லரை விற்பனைக்கான கூட்டம் குறைந்து காணப்பட்டது.

சென்னை, காசிமேடு மீன்பிடி சந்தையில், தினசரி, 150 – 200 டன் அளவிற்கு மீன்கள் விற்பனைக்கு வருகிறது. விடுமுறை தினங்களில், வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும். இந்நிலையில் புரட்டாசி மாதம், பெருமாள் வழிபாடு காரணமாக, பலரும் அசைவ உணவான மீன்களை தவிர்த்து வந்தனர்.

வழக்கமாக, புரட்டாசி முடிந்து ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமையில் மக்கள் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால், நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றதன் காரணமாக, மக்களின் வரத்து குறைவாக இருந்தது.

மழை காரணமாக, மீன்கள் வரத்தும் குறைவாக இருந்தது. இதனால், வஞ்சிரம், வெள்ளை வவ்வால், கருப்பு வவ்வால் உள்ளிட்ட மீன்கள், 1,000 ரூபாய் வரை விலை போனது. அதிகபட்சமாக, டைகர் இறால், 1,300 ரூபாய்க்கு விற்பனையானது.

படகு ஒன்றிற்கு, 300 கூடை வரை பிடிபட்டிருந்த கானாங்கெளுத்தி மீன், கிலோ, 200 – 250 ரூபாய் வரை ஏலம் போனது. இதனால், சில்லரை மீன் விற்பனை மந்தமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீன்கள் கிலோ ரூ.
வஞ்சிரம் 900 – 1,000
வெள்ளை வவ்வால் 900 – 1,000
கருப்பு வவ்வால் 800 – 900
பாறை 400 – 500
சீலா 400 – 500
சங்கரா 300 – 400
மத்தி 200 – 250
இறால் 400 – 500
டைகர் இறால் 1,200 – 1,300
நெத்திலி 200 – 250
நண்டு 300 – 400
வரி நண்டு 500 – 600
கடல் விரால் 500 – 600
கடம்பா 300 – 350
தும்புளி 200 – 250
கானாங்கெளுத்தி 200 – 250
வாளை 150 – 200



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us