தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் செய்திகள் : சென்னை

கிரைம் செய்திகள் : சென்னை

கிரைம் செய்திகள் : சென்னை


UPDATED : அக் 13, 2026 09:22 PM

ADDED : அக் 13, 2026 08:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 09:22 PM ADDED : அக் 13, 2026 08:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆடுகளை திருடி விற்ற மூவருக்கு ‘கம்பி’

கானத்துார்: கானத்துார், மஞ்சள்பேடு பகுதியில் இரண்டு மாதங்களில் 25க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டன. விசாரித்த கானத்துார் போலீசார், கண்ணகி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 32, கதிரவன், 22, ஆகியோர் ஆடுகளைத் திருடி, கொட்டிவாக்கம் கறிக்கடை உரிமையாளர் மொத்திபாபு, 40, என்பவரிடம் விற்றது தெரியவந்தது. நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 15 ஆடுகளை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

காப்பர் கேபிளை திருடியவர் பிடிபட்டார்

கொளத்துார்: மயிலாப்பூரை சேர்ந்த கார்த்திக், 29, இணையதள சேவை வழங்கும், ‘ஆக்ட்’ நிறுவன ஊழியர். கடந்த மாதம் 20ம் தேதி கொளத்துார், கணேஷ் நகரில் வாடிக்கையாளர் வீட்டருகே வைத்திருந்த 110 மீட்டர் காப்பர் கேபிள் மாயமானது. புகாரின்படி, கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரித்த ராஜமங்கலம் போலீசார், கேபிள் திருடிய கொடுங்கையூரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 22, என்பவரை நேற்று கைது செய்து, 2,000 ரூபாய் மதிப்புள்ள 30 மீட்டர் கேபிளை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா வியாபாரிகள் 7 பேர் சிக்கினர்

கொடுங்கையூர்: கொடுங்கையூர், மணலி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்ற கொடுங்கையூரைச் சேர்ந்த பரத், 24, நாகராஜ், 25, ஆகியோரை கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், புளியந்தோப்பில் கஞ்சா விற்ற சிவலிங்கம், சஞ்சய் உள்ளிட்ட ஐந்து பேரை புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்து, 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி பலி

எம்.கே.பி.நகர்: வியாசர்பாடியை சேர்ந்த ஹரிஹரன், 27, மாநகர பேருந்து தற்காலிக நடத்துநர். மதுவுக்கு அடிமையான இவர், கடந்த 5ம் தேதி வீட்டில் தீக்குளித்தார். 75 சதவீத தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிஹரன், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பணம் கேட்டு மிரட்டியவர் சிக்கினார்

வானகரம்: வானகரம், மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த தீபக், 31, கடந்த 2023ல் வானகரம் காவல் நிலையத்தில் பதிவான, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். பின், ஜாமினில் வந்தவர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த செப்., 28ல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, வானகரம் போலீசார் நேற்று முன்தினம் தீபக்கை கைது செய்தனர்.

இருவரை தாக்கிய ‘ஸ்விக்கி’ ஊழியருக்கு வலை

எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த மணிகண்டன், 42, கட்டட உட்புற மேற்கூரை அமைக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, கே.கே.சாலையில் பழம் வாங்கியபோது, பழங்களை எடுத்த ‘ஸ்விக்கி’ ஊழியர் சவுந்தர், 25, என்பவரை தட்டிக்கேட்டார். தகராறில், சாவியால் மணிகண்டனையும், தடுக்க வந்த நண்பர் செல்வத்தையும் சவுந்தர் தாக்கினார். காயமடைந்த மணிகண்டனுக்கு மூக்கில் இரண்டு தையல்கள் போடப்பட்டன. எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us