/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரைம் கார்னர் - கரை ஒதுங்கிய ஆண் சடலம்
/
கிரைம் கார்னர் - கரை ஒதுங்கிய ஆண் சடலம்
ADDED : அக் 25, 2025 04:35 AM
கரை ஒதுங்கிய ஆண் சடலம் மீட்பு பட்டினப்பாக்கம்: பட்டினப்பாக்கம், சீனிவாச புரம் அருகே கடற்கரையில் நேற்று மாலை ஆண் சடலம் கரை ஒதுங்கியது. பட்டினப்பாக்கம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.
போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் பலி குன்றத்துார்: திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 38; கூலித்தொழிலாளி. மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவரை, குன்றத்துார் அருகே சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக, உறவினர்கள் அனுமதித்தனர்.
அங்கு, திடீரென மயங்கியதாக கூறி போதை மறுவாழ்வு மையத்தினர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஆனந்தகுமாரை நேற்று அனுமதித்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

