வாலிபருக்கு வெட்டு
நால்வருக்கு வலை
எம்.ஜி.ஆர்., நகர்: கே.கே., நகர், அம்பேத்கர் குடியிருப்பைச் சேர்ந்த அப்பு, 24, என்பவரது ஆட்டோவில் இருந்த ஸ்பீக்கர், இரு மாதங்களுக்கு முன் திருடு போனது. அதே பகுதி ராஜேஷ், 24, ஸ்பீக்கரை திருடியது தெரிந்தது.
இதற்கிடையே, 'ஏசி' காப்பர் கேபிள் திருடிய வழக்கில் ராஜேஷ் கைது செய்யப்பட்டு, இரு நாட்களுக்கு முன் வெளியே வந்தார். இந்நிலையில், ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள், மது போதையில் அப்புவின் மாமா மகன் தினேஷ், 22, என்பவரை பின் தலையில் கத்தியால் வெட்டி தப்பினர். கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அவருக்கு மூன்று தையல் போடப்பட்டது. எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுபாட்டில் விற்ற
பெண்கள் கைது
கீழ்ப்பாக்கம்: டி.பி.சத்திரம், ஜோதி அம்மாள் நகரில் சாந்தி, 64, கீழ்ப்பாக்கத்தில் சுமதி, 50, ஆகியோர் சட்ட விரோதமாக 'டாஸ்மாக்' மதுபாட்டில்கள் விற்றனர். இருவரையும் கைது செய்த போலீசார், 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்த னர்.