ADDED : ஜூலை 09, 2026 12:49 AM
அ நிறம் | அளவு
விபத்தில் கணவர் இறப்பு; மனைவி படுகாயம்
நீலாங்கரை: பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் ராஜு, 45; தனியார் நிறுவன ஊழியர். நீலாங்கரையில் உள்ள மாமியாரை பார்க்க, மனைவியுடன் நேற்று முன்தினம் சென்றார்.
நீலாங்கரையில் பைக் நிறுத்தி, மருந்து வாங்க சாலையை கடக்க முயன்றார். அப்போது, திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி சென்ற கார் மோதி, தம்பதி துாக்கி வீசப்பட்டனர். இதில், ராஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்தி தலைமறைவான கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
