sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கிரைம் கார்னர்...: சென்னை

/

 கிரைம் கார்னர்...: சென்னை

 கிரைம் கார்னர்...: சென்னை

 கிரைம் கார்னர்...: சென்னை


ADDED : ஜன 30, 2026 05:47 AM

Google News

ADDED : ஜன 30, 2026 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின் வாரிய ஊழியர் படுகாயம்

ஓட்டேரி: திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 54; மின் வாரிய ஊழியர்.இவர், நேற்று ஓட்டேரி சந்திர யோகி சமாதி தெருவில் உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரிபார்த்தபோது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவருக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடையாற்றில் குதித்தவர் மாயம்

சென்னை: கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் உள்ள அடையாறு இணைப்பு பாலத்திலிருந்து, நேற்று மதியம் 1:30 மணியளவில் அடையாளம் தெரியாத ஆண் நபர் அடையாற்றில் குதித்தார். கோட்டூர்புரம் போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் தேடி வருகின்றனர்.

உணவக ஊழியரை வெட்டியவர் கைது

குன்றத்துார் : தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வசந்த், 42, சங்கர், 47. இருவரும், குன்றத்துார் அருகே, கொல்லச்சேரி பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த வசந்த் காய்கறி வெட்டும் கத்தியால், சங்கரை சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த சங்கர் மயங்கினார். அங்கிருந்தவர்கள் சங்கரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். குன்றத்துார் போலீசார் நேற்று வசந்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us